உள்ளூர் செய்திகள்

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் காலியிடங்கள்

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே நிறுவப்பட்டது. மக்களை மையப்படுத்திய சமூக ஏற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வாழ்க்கை, தன்மானம் மற்றும் ஸ்திரத்தன்மையுடன் கூடிய வாழ்க்கை ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மும்பைக் கிளையில் காலியாக உள்ள ஒர்க் புரொபஷனல்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தேவைகள் : விண்ணப்பதாரர்கள் பி.எஸ்.டயிள்யூ அல்லது எல்.எல்.பி., படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சட்டம் மற்றும் உரிைமகள் பிரிவில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் எழுத்து அனுபவம் 3 வருடம் பெற்றவராக இருக்க வேண்டும். நல்ல திட்டமிடல் மற்றும் கண்காணிக்கும் ஆற்றல், ஆங்கிலத் திறன், வழங்கும் ஆராய்ச்சி கட்டுரைகளை பத்திரப்படுத்தி வைக்கும் திறன், எழுத்து மற்றும் பேச்சு வன்மை, பயிற்சிக்கான மாடூல்களை உருவாக்கும் திறன், பயிற்சிகளை நடத்தும் திறன், சுய கட்டுப்பாடு மற்றும் சுய உத்வேக குண நலன்கள், குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன் ஆகிய திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் தங்கள் சி.வி.,யை முழு விபரங்களுடன் நிரப்பி rajgurug13@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கடைசி நாள் : 2017 மார்ச் 10.விபரங்களுக்கு : www.tiss.edu/careers-tenders


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !