இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: அசிஸ்டென்ட் பிரிவில் தமிழகம் 78, கர்நாடகா 32, கேரளா 30, மஹாராஷ்டிரா 23, ராஜஸ்தான் 21, மத்திய பிரதேசம் 10 உட்பட மொத்தம் 300 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழியில் பேச, எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.வயது: 30.9.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட 23 நகரங்களில் நடைபெறுகிறது.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 6.1.2024விபரங்களுக்கு: uiic.co.in