அணுமின்சார நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய அணுமின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: சயின்டிபிக் டிரைய்னி பிரிவில் டெக்னீசியன் 31, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 17, சேப்டி சூப்பர்வைசர் 1, அசிஸ்டென்ட் கிரேடு 4 என மொத்தம் 53 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவு வாரியாக டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிகிரி என மாறுபடும்.வயது: 5.1.2024 அடிப்படையில் டெக்னீசியன் 18 - 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட 18 - 25, ேசப்டி சூப்பர்வைசர் 18 - 35, அசிஸ்டென்ட் கிரேடு 21 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.பணியிடம்: செங்கல்பட்டுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 5.1.2024 மாலை 5:00 மணி.விபரங்களுக்கு: npcilcareers.co.in