இஸ்ரோவில் சேர விருப்பமா
இஸ்ரோவின் கீழ் செயல்படும் ஸ்பேஸ் அப்ளிகேசன் மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: சயின்டிஸ்ட் இன்ஜினியர் பிரிவில் அக்ரிகல்சர் 8, அட்மோஸ்பெரிக் சயின்ஸ் 8, கம்ப்யூட்டர் சயின்ஸ் 3 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: எம்.எஸ்சி., அக்ரிகல்சர், இயற்பியல், கடல் அறிவியல் முடித்திருக்க வேண்டும்.வயது: 15.1.2024 அடிப்படையில் கம்ப்யூட்டர் பிரிவுக்கு 18 - 30, மற்ற பிரிவுகளுக்கு 18 -28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுபணியிடம்: ஆமதாபாத், குஜராத்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. இதில் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும். மற்ற பிரிவுகளுக்கு ரூ. 500 மட்டும் திருப்பி அளிக்கப்படும்.கடைசிநாள்: 15.01.2024விபரங்களுக்கு: careers.sac.gov.in