உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் பணி

மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தின் கீழ் செயல்படும் சென்டர் பார் செல்லுலர் & மாலிகுலர் பயாலஜி (சி.சி.எம்.பி.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: டெக்னீசியன் பிரிவில் ஆய்வகம் 12, அனிமல் ஹவுஸ் 4, ஹெஸ்ட் ஹவுஸ் 4, எல்.டி.எஸ்., 4, பிளம்பர் 3, டிரான்ஸ்போர்ட் 2 உட்பட மொத்தம் 29 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.வயது: 20.1.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 20.1.2024விபரங்களுக்கு: ccmb.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !