இந்திய ரயில்வேயில் 5696 பணியிடங்கள்
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் பிளாஸ்பூர் 1316, பெங்களூரு 473, செகந்திராபாத் 758, சென்னை 148, கோல்கட்டா 345, பிரயாக்ராஜ் 296, போபால் 284, புவனேஷ்வர் 280, ஆமதாபாத் 238, அஜ்மர் 228, திருவனந்தபுரம் 70 உட்பட 5696 காலியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2024 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 19.2.2024விபரங்களுக்கு: rrbchennai.gov.in