உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் 118 மேனேஜர் காலியிடங்கள்

தமிழக அரசில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அசிஸ்டென்ட் மேனேஜர் (அக்கவுன்ட்ஸ்) 20, துணை இயக்குனர் (புள்ளியியல்) 17, அசிஸ்டென்ட் மேனேஜர்(சட்டம்) 16, சட்டக்கல்லுாரிகளில் விளையாட்டு, உடற்கல்வி இயக்குனர் 12, சீனியர் ஆபிசர் (சட்டம்) 9, துணை இயக்குனர் (விவசாயம்) 6, தமிழ் நிருபர் 5, ஆங்கில நிருபர் 5, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 4 உட்பட 118 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 1.7.2024 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம்ரூ. 200.கடைசிநாள்: 14.6.2024விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !