தமிழக அரசில் 2327 குரூப் 2 பணியிடங்கள்
தமிழக அரசில் 'குரூப் - 2', 'குரூப் - 2ஏ' பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.'குரூப் - 2' பிரிவில் 507 (வணிகவரி துறை துணை கமிஷனர் 336, வனம் 107, தொழிலாளர்நலத்துறை அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் 13, குற்றவியல் விசாரணை - சிறப்பு பிரிவு உதவியாளர் 19, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 4 உட்பட)'குரூப் - 2ஏ' பிரிவில் 1820 (கூட்டுறவு சீனியர் இன்ஸ்பெக்டர்497, பள்ளிக்கல்வி உதவியாளர் 172, ஆர்.ஐ., 124, செக்ரட்ரியட் 121, வணிகவரி உதவியாளர் 27, கிராமப்புற சுகாதார உதவியாளர் 28, போக்குவரத்து உதவியாளர் 32, உள்ளாட்சி நிதி ஆடிட் 273, காவல்துறை உதவியாளர் 61, தொழிலாளர் உதவியாளர் 42, சமூகநல உதவியாளர் 68 உட்பட) என மொத்தம் 2327 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2024 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.தேர்வு மையம்: அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 100கடைசிநாள்: 19.7.2024விவரங்களுக்கு: tnpsc.gov.in