உள்ளூர் செய்திகள்

தேசிய அறிவியல் மியூசியத்தில் சேர விருப்பமா...

கோல்கட்டாவில் உள்ள தேசிய அறிவியல் மியூசிய கவுன்சிலில் (என்.சி.எஸ்.எம்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கியூரேட்டர் 10, ஆபிஸ் அசிஸ்டென்ட் 7 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: கியூரேட்டர் பணிக்கு பி.இ., / பி.டெக்., ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 5.7.2024 அடிப்படையில் கியூரேட்டர் பணிக்கு 35, ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: கியூரேட்டர் பணிக்கு ரூ. 1770. ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ. 1180. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 5.7.2024விவரங்களுக்கு: ncsm.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !