உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு துறையில் 17,727 காலியிடங்கள்

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (சி.ஜி.எல்.,) தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.ரயில்வே, உளவுத்துறை, வெளியுறவு, சி.பி.ஐ., தேசிய மனித உரிமை, என்.ஐ.ஏ., புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் 17,727 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 24.7.2024 அடிப்படையில் பிரிவை பொறுத்து 18 -27, 20 - 30, 18 - 30, 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 24.7.2024விவரங்களுக்கு: ssc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !