கால்நடை வளர்ப்பிற்கும், மொபைல் செயலி
ஆடு, மாடு வளர்ப்பிற்கு, மொபைல் செயலியில், ஆலோசனை பெறலாம்.இது குறித்து, காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார், உழவர் பயிற்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் அ.கோபி கூறியதாவது:காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு வளர்க்கும் தொழில் பிரதானமாக உள்ளது. பருவ கால நோய் மற்றும் தீவனம் முறை கடைபிடிப்பதற்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கூகுல் பிளே ஸ்டோரில் சென்று, 'TANUVAS Feed Calculator ' மற்றும் 'TANUVAS WORM CHECK' டைப் செய்தால், மொபைல் செயலி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதன் பின், மாடுகளின் எடை பொருத்து தீவனம் மற்றும் வளர்ப்பு மேலாண்மை ஆலோசனைகள் பெறலாம். ஆடுகளுக்கு கால நோய்கள் குறித்து, தடுப்பு மேலாண்மை குறித்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இது பட்டதாரி இளைஞர்களுக்கு, கை கொடுப்பதோடு, ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 044 - 27264019