உள்ளூர் செய்திகள்

ஆந்திர எம்.டி.யூ., 1293 ரக நெல்லில் அதிக மகசூல்

ஆ ந்திர எம்.டி.யூ.,- 1293 ரக நெல் மகசூல் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:எனக்கு சொந்தமான நிலத்தில், பல வித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆந்திர எம்.டி.யூ.,1293 ரக நெல் முதல் முறையாக நேரடி விதைப்பு மூலமாக, நெல் சாகுபடி செய்துள்ளேன். இதில், களைப்பு திறன் அதிகமாகவேஉள்ளது.இது, 115 நாளில் அறுவடைக்கு வரும், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவு, ஒரு ஏக்கருக்கு 35 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும் என, ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள்தெரிவித்தனர்.நம்மூர் ஏரி நீர் பாசன களிமண்ணில் அதிகமாக பயிர் களைப்பு திறன் கொடுக்கிறது. யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை குறைத்துவிட்டு, பொட்டாஷ், காம்பளக்ஸ் போன்ற மணிச்சத்து உரங்களை அதிகமாக போட்டதால், கூடுதல் மகசூல் பெற முடிந்தது. ஒரு ஏக்கருக்கு, ஆந்திர எம்.டி.யூ., ரகம் -1293 நெல், 35 நெல் மூட்டைகள் மகசூல் பெறமுடியும் என, ஆந்திர விவசாயிகள் தெரிவித்தனர். நம்மூர் ஏரி பாசன களி மண்ணுக்கு, நீர் மேலாண்மை மற்றும் உரம் மேலாண்மை முறையாக கையாண்டு, 40 மூட்டைகள் நெல் அறுவடை செய்யலாம்.இவ்வாறு அவர்கூறினார். தொடர்புக்கு: ஆர்.தேவராஜ்87547 97918


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !