உள்ளூர் செய்திகள்

கூடுதல் மகசூலுக்கு ஆற்காடு கிச்சிலி சம்பா

ஆற்காடு கிச்சிலி சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பாரம்பரிய நெல் சாகுபடியில், ஆற்காடு கிச்சிலி சம்பா ரக நெல்லும் ஒன்றாகும். இது, சன்ன ரகமாகும். நடவு செய்து, 120 நாட்களில் நெல் அறுவடைக்கு வரும். இந்த பாரம்பரிய ரக நெல், அனைத்து விதமான மண்ணுக்கும் அருமையாக வளரும்.குறிப்பாக, சம்பா பருவத்தில் சாகுபடி செய்தால் மட்டுமே, அதிக மகசூல் ஈட்ட முடியும். பிற பருவங்களில் சாகுபடி செய்தால், குறைந்த மகசூல் கிடைக்கும்.இந்த ஆற்காடு கிச்சிலி சம்பா ரக நெல், மஞ்சள் நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லுக்கு நோய், பூச்சி தாக்குதல், நீர் மேலாண்மை, களை கட்டுப்படுத்தும் முறையை சரியாக கையாண்டால், 1 ஏக்கருக்கு, 20 மூட்டை வரையில் நெல் மகசூல் பெறலாம். இந்த அரிசியில், நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால், சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:-நீலபூ.கங்காதரன்,96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !