உள்ளூர் செய்திகள்

சவுடு மண்ணிலும் நல்ல மகசூல் தரும் பேயன் வாழை

சவுடு மண்ணில் பேயன் வாழை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, சவுடு மண்ணில் காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், 'பேயன்' வாழை சாகுபடி செய்துள்ளேன். இது, நன்றாக மகசூல் கொடுக்க துவங்கிஉள்ளது.இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, பழ மரங்களை சாகுபடி செய்யும் போது, பழங்கள் அதிக இனிப்பு சுவையுடன் இருக்கிறது. சந்தையில் கூடுதல் விலை விற்பனை செய்தாலும், மக்கள் வாங்கி சாப்பிடுவதில், தயக்கம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. மாதவி,97910 82317.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !