மணல் கலந்த களிமண்ணிலும் பெங்களூரு பால்சாத்பள்ளி ரோஜா
பெங்களூரு பால்சாத்பள்ளி ரோஜா சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சி.குப்பன் கூறியதாவது:மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், பெங்களூரு பால்சாத்பள்ளி ரோஜா சாகுபடி செய்துள்ளேன். மணல் கலந்த களிமண்ணில் நன்றாக வளர்கிறது.குறிப்பாக, தமிழ்நாட்டை காட்டிலும், பெங்களூரு பகுதியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படும். அங்கு விளைச்சல் அமோகமாக கிடைக்கும்.அதேபோல, நம்மூரிலும் ரோஜா மகசூல் கிடைப்பதற்கு, கோடைக்காலம் நிறைவு பெற்ற பின், ஆவணி மாதம் இறுதியில் ரோஜா செடிகளை நடலாம். அதற்கு ஏற்ப நிலங்களை பண்படுத்தி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.நீர், உர நிர்வாகத்தை முறையாக கையாளும் போது, பெங்களூரு பால்சாத்பள்ளி ரோஜாவில் கணிசமான மகசூல் மற்றும் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: சி.குப்பன்,84891 95575.