சவுடு மண்ணிலும் சின்னார் ரக நெல்
சவுடு மண்ணில் சின்னார் பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம்,நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன்கூறியதாவது:செம்மண் நிலத்தில், பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், சவுடு மண் நிலத்தில், சின்னார் பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இந்த நெற்கதிர் துவக்கத்தில் பச்சை நிறத்தில் இருக்கும், பின், இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.இது, 120 நாட்களுக்கு பின், அறுவடைக்கு வரும். இந்த ரகத்தின் நெல், ஏறக்குறைய சன்ன ரகத்திற்கும், குண்டுரகத்திற்கும் இடைப்பட்ட கனத்தில் இருக்கும். களர் உவர் நிலத்தை தவிர, அனைத்துவிதமான நிலங்களில் சாகுபடி செய்யலாம்.குறிப்பாக, இயற்கை சாகுபடிக்கு ஏற்ப, ரசாயண உரங்களின் பயன்பாடு இன்றி இயற்கை உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை முறையாக கையாண்டால், அதிக மகசூல் பெற முடியும்.இந்த நெல்லில் அதிக மாவுச்சத்து இருப்பதால், எலும்புமற்றும் வைட்டமின்குறைபாடுகளை போக்கு வதால் இந்த அரிசிக்கு வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,96551 56968.