50 சதவீதம் மானியம் பெற விவசாயிகள் அணுகலாம்
நுண்ணீர் பாசன திட்டத்தில், 50 சதவீத மானியம் பெறுவது குறித்த, காஞ்சிபுரம் தோட்டக்கலை துணை இயக்குனர், பொ. இம்மானுவேல் கூறியதாவது:தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மாணியத்தில், பல நீர் பாசன திட்டங்குக்கு, 50 சதவீத மானிய திட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, நுண்ணீர் பாசன திட்டத்தில், ஆழ்குழாய், பைப் லைன், மின் மோட்டார் மற்றும் டீசல் இயந்திரம் வாங்குவது; தரை மட்ட தொட்டிகள் அமைப்பது ஆகியவற்றிற்கு மானியம் அறிவிக்கப் பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 044 - 2722 2545