உள்ளூர் செய்திகள்

மூலிகை வைத்தியத்தில் வான் கோழிகளுக்கு சளி நீக்கம்

மூலிகை வைத்தியத்தில், வான் கோழிகளுக்கு சளி நீக்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:நாட்டுக்கோழி மற்றும் வான் கோழிகளுக்கு சளி தொல்லை அதிகமாக இருக்கும். இதனால், கோழிகள் தீவனம் எடுத்துக் கொள்ளாது. எடை வேகமாக குறைந்து விடும். மூக்கில் இருந்து அடிக்கடி சளி ஒழுகும். இரவு நேரங்களில், கோழிகள் குறட்டை விடும். சில நேரங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறக்க நேரிடும். இதை தவிர்க்க, 100 கிராம் துளசி இலையை அரைத்து, கோழிகளுக்கு குடிநீரில் கலந்து கொடுக்க வேண்டும்.அதிக சளி தொந்தரவு இருக்கும் கோழிகளுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற கோழிகளுக்கு, அரை கிலோ செந்தட்டி வேரை பொடி செய்து, தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு கலந்து, கோழிகள் குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். மேலும், 10 கிராம் இஞ்சியை, தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி, 97907 53594.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !