உள்ளூர் செய்திகள்

கால்நடைகளை பாதுகாக்க மூலிகை தண்ணீர் ஏற்றது

கோடை காலத்தில், ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் நாக்கு வறட்சி தவிர்ப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் வீட்டு கொட்டகையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு நாக்கு வறட்சி ஏற்படும். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் புல்லை மேய்வதை தவிர்த்து,நிழலைத் தேடி சென்று இளைப்பாறும்.சில நேரங்களில் ஆடு, மாடுகள் இறக்கவும் நேரிடு கிறது.இதை தவிர்க்க, கோடை காலத்தில் மூலிகை தண்ணீரை தயாரித்து ஆடு, மாடுகளுக்கு வழங்கலாம். குறிப்பாக, தினசரி இரு முறை வழங்கும் தண்ணீர், கூடுதலாக இரு முறைக்கு வைக்க வேண் டும்.குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், சிறிய ரக நெல்லிக்காய் இடித்த தண்ணீர், சீரகம் காய்ச்சியதண்ணீர், வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் என, பல்வேறு விதமான தண்ணீரை வழங்கலாம்.ஒவ்வொரு முறை தண்ணீர் கொடுக்கும்போதும், புதிய தண்ணீராக தான் கொடுக்க வேண்டும். அப்போது தான் கோடை காலத்தில் நோய் தொற்று பரவாமல் இருக்கும். கோடை காலங்களிலும் பால் நன்றாக கறக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !