உள்ளூர் செய்திகள்

ஊடுபயிராக குண்டு ரக கீரைக்காய்

குண்டு ரக கீரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளைப் பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், குண்டு ரக கீரைக்காயை, மிளகாய் சாகுபடியில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன். இந்த கீரைக்காய் நீளவாக்கில் வளராது. அதற்கு பதிலாக குண்டாக வளரும் தன்மை உடையது.இது, பந்தல் முறை மற்றும் நிலத்திலும் சாகுபடி செய்யலாம். நிலப்போர்வையில் சாகுபடி செய்யும் போது, களை புற்களின் வளர்ச்சி முற்றிலும் தடுக்கப்படும்.கோடை காலத்தில் நிலத்திலும், மழை காலத்தில் பந்தல் முறையில் சாகுபடி செய்யும் போது, நல்ல மகசூல் மற்றும் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: சு.ரமேஷ்,81109 44475.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !