உள்ளூர் செய்திகள்

இருவித வருவாய்க்கு காராமணி சாகுபடி

இருவித வருவாய்க்கு உகந்த காராமணி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எம்.சத்தியபாணி கூறியதாவது: களிமண் நிலத்தில் நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். விளைப்பொருட்களுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்து வருகிறேன். பொரியல் காராமணியும், அதே முறையை பின்பற்றி சாகுபடி செய்துள்ளேன். காய்கறி தோட்டத்தில், வரப்பு ஓரங்களில் காராமணி நட்டுள்ளேன். பிஞ்சாக இருக்கும்போதே பொரியலுக்கு பறித்து விற்று விடுவேன். காராமணி முதிர்ந்துவிட்டால், உலர்த்தி பருப்பாக விற்று விடுகிறேன். அந்த வகையில், இரு விதமாக வருவாய் ஈட்ட வழி வகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: எம்.சத்தியபாணி, 93808 57515.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !