உள்ளூர் செய்திகள்

பழங்களின் அரசன் மாம்பழம்

மாம்பழம் சிறுநீரைப் பிரிக்கும், மலத்தை இளக்கும், மலச்சிக்கலைப் போக்கும். உடலை எழிலுறச் செய்வதோடு கொழுக்க வைத்த உடலுக்கு உறுதியையும் தரும். வாய்வுத் தொல்லையை நீக்கும். இது பித்தத்தை நீக்கிக் குடலுக்கு வலுவைத் தரும்.மாம்பழம் சிறுநீர்க் கோளாறுகள், இதயக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் குணமாக்குவதோடு வாய் துர்நாற்றத்தையும் போக்க வல்லதாகும். உடல் எரிச்சலைப் போக்கு வதோடு, ஈரல் வலியையும் குறைக்கும். மாம்பழச்சாறு பல ஆண்டுகளாகத் தலைவலியினால் துன்பப்படுபவர்களுக்கும் பார்வைக் குறைவு ஏற்பட்டுக் கண்வலிமை இழந்தவர்களுக்கும் நல்ல அருமருந்தாக அமைகிறது.மாம்பழத்தை சாப்பிட தாகம் தணியும். இது குடல், ஈரல், கருப்பை (Uterus) ஆகியவற்றில் உண்டாகும் இரத்த ஒழுக்கை நிறுத்துவதற்கு உதவும். மாம்பழத் தோலைப் பால்விட்டு அரைத்துத் தேன் கலந்து தரக் குருதி சீதபேதி குணமாகும். உதிரப்போக்கிற்கும் இது நல்ல மருந்து. கேரட் சாறு, மாம்பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து இரண்டு மாதங்கள் சாப்பிட மூத்திரைத்தாரை கல்லடைப்பு நீங்கி குணம் பெறலாம். மாம்பழத்தை மிகுதியாக உண்டால் மார்பு எரிச்சல், நமைச்சல், கிரந்தி, கருங்கரப்பான் போன்ற கேடுகள் உண்டாகலாம். பசியும் குறையும்.இரத்த அழுத்தம், அஜீரணம் உள்ளவர்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மாம்பழம் கண்பார்வையைத் தெளிவாக்கும். மாம்பழச்சாற்றுடன் பாலும், தேனும் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு வேண் டிய சக்தி, ஞாபக சக்தி ஆகியவற்றுக்கு உதவுவதுடன் பசியையும் சீராக வைத்து கொள்ள உதவும் மாம்பழச்சாறு அருந்துவதால் தோல் நோய்கள், முகப்பருக்கள் முதலியவை வராமல் தடுக்கலாம். எனவே இத்தகைய ஏதேனும் குறைபாடு உடையவர்கள் மாம்பழத்தைக் கண்டால் விடாதீர்கள். குறிப்பிட்ட காலங்களில் கிடைக்காத போது சேமிக்கப்பட்ட மாம்பழக் கூழ், கனிசாறு, மாம்பழக் கேண்டி, மாம்பழ மிட்டாய், மாம்பழ தகடு (மேங்கோ பார்) முதலிய வடிவங்களில் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.இது குறித்து மேலும் விபரம் பெற டாக்டர் பா.இளங்கோவன், அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !