உள்ளூர் செய்திகள்

முல்லை சாகுபடி மணக்கும்

முல்லை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பழனி கூறியதாவது:நான், 30 சென்ட் நிலத்தில், முல்லை சாகுபடி செய்துள்ளேன். சித்திரை மாதத்தில் இருந்து, கார்த்திகை மாதம் வரை, முல்லை அறுவடை செய்யலாம். துவக்கத்தில், நிறைய பூக்களும்; ஐந்து மாதங் களுக்கு பின், குறைவான பூக்களும் கிடைக்கும்.ஒரு சேர் என, அழைக்கப்படும் ஒரு படி முல்லை பூ, 10 ரூபாய் முதல், சீசன் நேரங்களுக்கு ஏற்ப, 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.உரம் மற்றும் அறுவடை பராமரிப்பு செலவு போக, மாதம், 5,000 ரூபாய் கிடைக்கும். அதே, 1 ஏக்கரில் முல்லை சாகுபடி செய்தால், மாதம், 20 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99439 79958


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !