பசுந்தீவனமாகும் நேப்பியர் புல்
கால்நடை விவசாயிகளுக்கு பால் மாடுகள் வளர்ப்பு மூலமே வருமானம் கிடைக்கிறது. அதிகமான பால் கறவைக்கு உதவும் சூப்பர் நேப்பியர் புல் தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'பேங்க் சோங்' என்று அழைக்கப்படும் 'சூப்பர் நேப்பியர்' புல் கால்நடைகளுக்கு சிறந்த பசுந்தீவனமாக இருக்கிறது. இது தாய்லாந்து நாட்டின் தோன்றியது. இது யானை புல் மற்றும் கம்பு ஆகியவற்றை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட ரகம். இதில் 16 - 18 சதவீதம் புரதச்சத்து உள்ளது. நேப்பியர் புல்களின் ராஜா எனவும் அழைப்பர். அடர் தீவன செலவீனத்தை குறைக்கலாம். பால் உற்பத்தி அளவு அதிகரிக்கும்.கோ 4, கோ 5 புல்லுடன் ஒப்பிடும்போது சுனை குறைவு. ஏக்கருக்கு 200 டன் உற்பத்தி திறன் கொண்டது. நீரில் கரையும் கார்போ ஹைட்ரேட் 18 சதவீதம் வரை இருப்பதால், 'சைலேஜ்' வடிவில் பதப்படுத்தி வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். சூப்பர் நேப்பியர் புல்லை விதைக் கரணைகள் மூலம் நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும். கரணைக்கு 2 அடி இடைவெளி விட்டு நடவு செய்லாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் தேவை. 60 நாட்களில் முதல் அறுவடையும் தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டுக்கு ஒன்பது முறை அறுவடை செய்யலாம். 90 நாட்கள் கழித்து விதைக்கரணைக்கு பயன்படுத்தலாம். தொடர்புக்கு 98420 07125.- டாக்டர் பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர் தேனி.