உள்ளூர் செய்திகள்

நீரா

தென்னை மரங்களில் வரும் பாளைகளை (பூ) பதப்படுத்தி சீவினால் திரவமாக சொட்டி விடும். அது தித்திப்பான இயற்கை பானம். தென்னை மரங்களில் இருந்து வடிவது 'நீரா'. தென்னை பதநீர், தென்னை நீர் என பல பெயர்கள் உண்டு. மரத்தில் ஏறி, காய்ந்து போன பாளை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். பின் பதநீர் வடியும் தகுதியுள்ள உருண்டு திரண்டு நீளமான பாளைகளை, கயிற்றால் சுற்றி இறுக கட்டி ஒரு கட்டையால் பதமாக தட்ட வேண்டும், பதம் வந்ததும் 4,5 வது நாளில் அரிவாளால் பாளையின் நுனிப்பகுதியை லேசாக சீவ வேண்டும். தினமும் காலை, மாலை சீவ வேண்டும். அப்போது துளி துளியாக பாளையில் திரவம் கசிய துவங்கும். பதனீர் சேகரம் செய்ய மண் கலசம் கட்டுவார்கள். 7, 8வது நாளில் துளி துளியாக வடிய துவங்கும். அது இனிப்பாக இருக்கும். அப்போது மண் கலசத்தில் அடியில் சிறிது சுண்ணாம்பை தடவி பாளையின் நுனிப்பகுதி கலசத்துக்குள் இருக்கும்படி கவனித்து கயிற்றால் மட்டையில் கட்டி தொங்க விடுவார்கள். மறுநாள் காலையில் கலசத்தை அவிழ்த்து பார்த்தால் சுத்தமான பதநீர் வடிந்து இருக்கும். இதனை தென்னை பதநீர் என்பர். கேரளாவில் 'நீரா' என்கிறார்கள். 10 முதல் 12 மணி இடை வேளைக்கு பின் மாலையில் மறுபடியும் ஏறி பாளையை சீவி விடுவர். அதிகமாக பதநீர் வடியும் தன்மையுள்ள மரங்களில் உள்ள பதநீரை மாலையில் இறக்குகிறார்கள். இதை 'மாலை பதனீர்' என்று கூறுவர்.- முனைவர் வா.செ.செல்வம்தென்னை ஆராய்ச்சியாளர் திருவையாறு. 82204 59341


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !