வாழையில் புதிய தொழில்வாய்ப்புகள்
உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உள்ள வாழைப்பழம், அரிசி, கோதுமை, பால் உற்பத்தியின் மொத்த மதிப்புக்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது. 140 நாடுகளில் வாழை பயிரிடப்படுகிறது.வாழையில் புதுமை மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதில் வாழை ஆராய்ச்சி மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காகவே வாழை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவு (ஐ.டி.எம்.யு.,), வாழை வேளாண் வணிக மேம்பாட்டு மையம் (ஏ.ஆர்.ஐ.,) செயல்படுகிறது. வாழை ஆராய்ச்சி மையத்தில் தொழில்முனைவோருக்கு உணவு பதனிடும் இயந்திரங்கள் முதல் ஆய்வக வசதி, வணிக மேம்பாடு, பிராண்டிங், சந்தை இணைப்பு, அறிவுசார் சொத்து பாதுகாப்பு, சந்தைப்படுத்துதல் வரையான வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். நுண், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்களுடன் இம்மையம் இணைந்து வேலை செய்கிறோம். பெண்கள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது உணவு பதனிடும் மையம்வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள பொது உணவு பதனிடும் மையத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வாழை, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் இயந்திரங்களை வழங்குகிறது. வாழைக்காய் மாவுவாழைக்காய் மாவு அதிக எதிர்ப்புத் திறன் ஸ்டார்ச் கொண்டது. சத்துமாவு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருளாக வாழைக்காய் மாவை பயன்படுத்தலாம். நேந்திரன் ரகம், மாவு தயாரிப்பதற்கு ஏற்றது. புளிப்பில்லாத சப்பாத்தி, ரொட்டிகள் தயாரிக்க பயன்படுத்தலாம். கனடா, சுவிட்சர்லாந்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக வாழைமாவு தயாரிக்கப்படுகிறது. வாழைப்பழ அத்திமுதிர்ந்த வாழைப்பழங்களை உரித்து, கிருமி நீக்கம் செய்து சோலார் டிரையர் மூலம் உலர்த்தி வாழைப்பழ அத்தி தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த வாழைப்பழங்களை தேனில் நனைத்தும் தயாரிக்கலாம். பழுத்த வாழைப்பழ பொடிபழுத்த வாழைப்பழப் பொடியில் அதிக சத்துகள் உள்ளதால் உணவு தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். நன்கு பழுத்த, கனிந்த வாழைப்பழங்களை வாழைப்பழ பானம் தயாரிக்க பயன்படுத்தலாம். காபின் கலந்த பானங்களுக்கு மாற்றாக வாழை பழச்சாறு பயன்படுத்தபடுகிறது. ஒயின், வினிகர்வாழைப்பழத்தின் நொதித்த தெளிவுபடுத்தப்பட்ட சாற்றின் மூலம் வாழைப்பழ ஒயின் தயாரிக்கப்படுகிறது. முழு ஆல்கஹால் கொண்ட ஒயினுக்கு மாற்றாக குறைந்த ஆல்கஹால் கொண்ட வாழைப்பழ ஒயின்கள் நுகர்வோருக்கு நன்மை தரும்.வாழைத்தண்டு, பூ ஊறுகாய் தயாரித்தால் நுகர்வோர் குறைந்த சோடியம் ஊறுகாயை உட்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதிக அத்தியாவசிய தாதுக்கள்,விட்டமின்களை சேர்ப்பதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் இந்த வகை ஊறுகாய் உதவும். வாழைத்தண்டினை சிறு துண்டுகளாக்கி வேக வைத்து அதனுடன் நறுமணப் பொருட்கள், வினிகர் சேர்த்து ஊறுகாய் தயாரித்தால் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்கும். வாழைத்தண்டுவாழைத்தண்டு ஜூஸ் உடல் நலத்திற்கு ஏற்றது. சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணமாக உள்ளது. 200 மில்லி வாழைத்தண்டு ஜூஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கலாம். இது 6 மாதங்கள் வரை கெடாது. வாழைத்தண்டு சாறு தயாரிப்பதன் மூலம் ஒரு ஏக்கரில் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். வாழைத்தண்டு மிட்டாய்ஒரு எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் வாழையிலிருந்து தார்கள் அறுவடைக்கு பின், 5 டன் முதல் 7 டன் வரை வாழைத்தண்டு பிரித்தெடுக்கலாம். வாழைத்தண்டுகளை குறைந்தபட்ச பதப்படுத்துதல் மூலம் 3 வாரங்கள் வரை கெடாமல் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவான தொழில்நுட்பத்தை தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. வாழைத்தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக்கி அதனை சர்க்கரையில் ஊறவைத்து உலர வைத்து வாழைத்தண்டு மிட்டாய் தயாரிக்கலாம். ஒரு கிலோ வாழைத்தண்டு மிட்டாயை ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கலாம்.வாழைத்தார் அறுவடை செய்த பின் அதன் பட்டைகளிலிருந்து வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் 1000 மரங்களிலிருந்து 100 முதல் 150 கிலோ மென்மையான வாழைநார் பிரித்தெடுக்கலாம். ஒரு கிலோ வாழைநார் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கலாம்.மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத், ஸ்டார்ட்அப் இந்தியா மூலம் தொழில்முனைவோராகலாம். வாழை வேளாண் வணிக மேம்பாட்டு மையம் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவு மூலம் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கான தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப வழிகாட்டுதல், உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குகிறோம்.