உள்ளூர் செய்திகள்

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புளூ பெர்ரி பழம்

புளூபெர்ரி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது: மலை மண் சார்ந்த செம்மண்ணில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், புளூ பெர்ரி பழம் ஊடு பயிராக சாகுபடி செய்துள்ளேன். இது, படரும் தன்மை உடைய செடியாக உள்ளது. நம்மூர் மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்களின் சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளர்கிறது. இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, புளூ பெர்ரி பழத்தில், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சத்துக்கள் உள்ளன. மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துதல், நினை வாற்றலை மேம் படுத்துதல் ஆகியவற்றுக்கு சந்தையில் விற்பனைக்கு பஞ்சமும், வருவாய்க்கு குறைவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.வெங்கடபதி, 93829 61000.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !