நிலக்கடலையில் ஊட்டச்சத்து குறைபாடுகளும் நிவர்த்தியும்
தோராயமாக நிலக்கடலை பயிரானது சுமார் 112 கிலோ தழை, 27 கிலோ மணி மற்றும் 34 கிலோ சாம்பல்சத்து ஆகியவற்றை ஒரு எக்டேர் நிலத்தில் எடுத்துக்கொள்கிறது. இதற்கு வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தும் தன்மை உண்டு (வேரில் பாக்டீரியா மூலம்) இப்பயிருக்கு சரியாக உரம் இடாவிட்டல் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். இதைத் தவிர்க்க ஊட்டச்சத்து பற்றாக்குறையினை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வது அவசியம்.தழைச்சத்து: இது செடியின் வளர்ச்சிக்கும் இலையுள் பச்சையம் கட்டவும் தேவை. இதன் குறைபாட்டினால் செடிகள் வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். இதனை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்ட யூரியாவை சமஅளவில் பிரித்து இடவும்.மணிச்சத்து: விதை வளரும் பருவம் மற்றும் முதிர்ச்சியடைய இச்சத்து மிக அவசியம். இதன் குறைபாட்டினால் விதை இல்லாத கடலை அல்லது சுருங்கிய கடலை போன்ற நிலை ஏற்படும். இதனை கட்டுப்படுத்த சூப்பர் பாஸ்பேட்டை 25-50 கிலோ ஒரு எக்டேர் என்ற அளவில் இடவும்.சாம்பல்சத்து: இது நிலக்கடலையின் வேர் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்து. இதன் குறைபாட்டினால் செடியின் வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனை கட்டுப்படுத்த 50 கிலோ/எக்டர் என்ற அளவில் பொட்டாஷ் உரங்களை இடவும்.கால்சியம்: இந்த சத்து நிலக்கடலையில் உருவாகும் தருணத்தில் மிகவும் தேவை. இதன் குறைபாட்டினால் செடியின் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய 250-500 கிலோ/எக்டேர் என்ற விகிதத்தில் ஜிப்சத்தை மண்ணில் இடவும்.கந்தகச்சத்து: இது நிலக்கடலையில் மிக முக்கியமான ஒரு சத்து ஆகும். இது புரதச்சத்து உருவாகவும், இலையில் பச்சையம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் குறைபாட்டினால் இலைகள் வெளுத்து காணப்படும். ஜிப்சத்தை இடுவதன் மூலம் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.துத்தநாகம்: இது நிலக்கடலையில் பச்சையம் மற்றும் கடலையின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதன் குறைபாடுகள் இரும்புச்சத்து குறைபாடு போன்றே காணப்படும். இலையின் நரம்புகளில் கோடுகள் போன்ற அமைப்புகள் தென்படும். இதனை கட்டுப்படுத்த 15 கிலோ ஜிங்க் சல்பேட் ஒரு எக்டேருக்கு என்ற அளவில் இடவும்.மெக்னீசியம்: முதிர்ந்த இலைகள் வெளுத்து காணப்படும். இலை நுனிகள் உள்நோக்கி வளைந்து காணப்படுவதும் இதன் குறைபாடுகள் ஆகும். இதனை கட்டுப்படுத்த ஒரு சதவீதம் மெக்னீசியம் சல்பேட் கரைசல் தெளிக்கவும்.இரும்புச்சத்து: இலைகள் வெளுத்து காணப்படும். இரும்புச்சத்து குறைபாட்டை இதன்மூலம் அறியலாம். இலை நரம்புகளும் வெளுத்து காணப்படும். இந்த குறையை நீக்க 0.5-1 சதவீத பெர்ரஸ் சல்பேட்டுடன் 0.1 சதவீதம் சிட்ரிக் அமிலம் கலந்து வயலில் தெளிக்கவும்.போரான்: இதன் குறைபாட்டினால் இலைகள் நிறமாற்றம் அடைந்து காணப்படும். இலை விளிம்புகள், நரம்புகள் பாதிக்கப்படும். இதனை கட்டுப்படுத்த 10 கிலோ போராக்சை ஒரு எக்டேருக்கு இடவும்.மாங்கனீசு: இலையில் புள்ளிகள் காணப்படுவதே இந்த குறைபாட்டின் அறிகுறிகள். இக்குறைபாட்டை போக்க மாங்கனீசு சல்பேட்டை 0.5 சதவீத கரைசலாகத் தெளிக்கலாம்.மாலிப்டினம்: இதன் குறைபாட்டினால் வளிமண்டலம் நைட்ரஜனை நிலைப்படுத்துவது தடுக்கப்படுகிறது. இக்குறைபாட்டை நீக்க மண்ணில் 0.56-1/72 கிலோ/எக்டேர் என்ற அளவில் அம்மோனியம் மாலிப்டேட்டை இடவும்.மேற்குறிப்பிட்ட நுண்ணூட்டச்சத்துப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதன் மூலம் நிலக்கடலையின் மகசூலை அதிகரிக்கலாம்.முனைவர் கொ.பாலகிருஷ்ணன்,மதுரை-625 104.