சவுடு மண்ணில் விளையும் இளஞ்சிவப்பு நெல்லிக்காய்
இளஞ்சிவப்பு நெல்லிக்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பழங்களை சாகுபடி செய்து வருகிறேன். ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது, வித்தியாசமான மரச்செடிகளை வாங்கி வந்து நடவு செய்வேன்.அதுபோல, இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காய் செடி வாங்கி வந்து நட்டேன். அந்த செடி நன்கு வளர்ந்து காய்க்க துவங்கிவிட்டது. இதற்கு, ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கள், பழங்களை சாகுபடி செய்வதால், எங்களிடம் கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயங்குவதில்லை.நெல்லிக்காயை அப் படியே விற்பனை செய்யலாம். தேனில் ஊற வைத்த மதிப்பு கூட்டிய பொருளாகவும் தயாரித்து விற்கலாம். அவரவரின் விற்பனை திறனை பொறுத்து, கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.மாதவி,97910 82317.