அதிக வருவாய் தரும் ஊதா நிற முல்லை பூ
ஊதா நிற முல்லை பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, விநாய கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மாணிக்கம்கூறியதாவது:நெல், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான விளைபொருட்களை என் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஊதா நிற முல்லை பூ சாகுபடி செய்துள்ளேன். இந்த சாகுபடியில், கணிசமானவருவாய் ஈட்ட முடியும்.குறிப்பாக, ஜனவரி மாதம் வளர்ந்து நிற்கும் முல்லை செடிகளை கவாத்து என அழைக்கப்படும் மேல் பகுதியில் வெட்டி விட்டால், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் பூ மகசூல் கொடுக்க துவங்கும்.அதன் பின், பூக்களின் மகசூலுக்கு ஏற்ப, ஒன்பது மாதங்களும் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.ஒரு ஏக்கர் நெல் மற்றும் காய்கறிகளில் கிடைக்கும் வருவாய், 15 சென்ட் நிலத்தில் கிடைக்கும். அதற்கேற்ப முல்லை செடிகளை பராமரிக்கவும், பூக்களை பறிக்கவும் கூலி ஆட்கள் தேவைப்படும். கூலியாட்களை அமர்த்துவதை காட்டிலும், நாமே செய்து கொண்டால் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.மாணிக்கம்,63818 23694.