உள்ளூர் செய்திகள்

உளுந்தில் மகசூல் அதிகரிக்க கடல்பாசி உர திரவம்

கடல் பாசியானது தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகளான தொண்டி முதல் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. கடல்பாசியின் நிறத்தைக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. பச்சைபாசி, 2. பழுப்புப்பாசி, 3. சிவப்புப்பாசி.மேல்நாடுகளில் பழங்காலத்தில் இருந்தே இந்த கடல்பாசியை, கடல்பாசி உர திரவமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கடல் பாசி உரதிரவத்தில், தாவர வளர்ச்சி ஊக்கிகளான ஆக்சிஜன், சைட்டோகைனின், அஸ்கார்பிக் அமிலம், அல்சினிக் அமிலம் மற்றும் முக்கியமாக தழை, மணி, சாம்பல் சத்துக் களும் அயோடின், துத்தநாகம், கால்சியம் மற்றும் கந்தக உப்புகளும் அதிகமாக உள்ளன. இந்த வகையில் உளுந்தில் மகசூலை அதிகரிக்க, கடல்பாசி உரதிரவத் தில் விதைகளை ஊறவைத்து, உலரவைக்கும் முறையிலும் இலைவழி நுண்ணூட்டமாகவும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாட்டில் மண்டபம் பகுதிகளில் கடல்பாசிகளான உல்வாலாக்குக்கா டர்பினேரியா கோனாய்ட்ஸ் மற்றும் சர்காசம் பாலி சிஸ்டம் சேகரித்து நீரில் நன்றாக கழுவி, சூரிய ஒளியில் காயவைத்து பின் வெப்ப அறையில் 40 டிகிரி செ. 36 மணி நேரம் வைத்து பொடியாக அரைக்க வேண்டும். இந்த பொடியிலிருந்து 500 கிராம் எடுத்து குலுக்கிவிட வேண்டும். பிறகு மேலே உள்ள திரவத்தை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதியுள்ள கசடில் 200 மிலி நீர் ஊற்றி, 30 நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் வடிகட்ட வேண்டும். இந்த இரண்டு திரவத்தையும் கலக்கி அதன் 500 மிலி வரும் அளவிற்கு தூய்மையான நீரை ஊற்ற வேண்டும். ஏற்கனவே ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவிலிருந்து 0.15 சதம் விதை நேர்த்திக்காகவும், 2.5 சதம் இலைவழி நுண்ணூட்டமாகவும் தெளிப்பதற்கு பயன்படுத்தப் பட்டது.வயல்வெளி ஆராய்ச்சி மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காரீப் மற்றும் ராபி பருவத்தில் மேற்கொள்ளப்பட்டது. உளுந்து வம்பன் 3 விதைகள், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு கடல்பாசி உர திரவத்தில் விதைநேர்த்தி (0.75%) மற்றும் கடல்பாசி உரதிரவத்தை (0.5%) இலைவழி நுண்ணூட்டமாக இளம் பருவம் (15 நாட்களில்) மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்கப்பட்டது (35 நாட்களில்) ஆராய்ச்சியின் போது செடியின் காய்ந்த எடை, இலை பரப்பு குறியீடு செடியின் வளர்ச்சியின் அளவு மொத்த காய்களின் எண்ணிக்கை, எடை ஒரு செடியின் காய்களின் எடை, ஒரு செடியின் விதை மகசூல் கணக்கிடப்பட்டது. செடியின் வளர்ச்சியின் அளவு 40வது மற்றும் 60வது நாளில் கணக்கிடப்பட்டது. மற்ற பண்புகள் அனைத்தும் விதைத்து 60 நாட்களுக்குப் பிறகு கணக்கிடப்பட்டது.அனைத்து கடல்பாசி உர திரவத்தில் விதைநேர்த்தி மற்றும் இலைவழி நுண்ணூட்டம் கொடுத்த செடிகளில் மகசூல் அதிகமாக இருந்தது. சர்காசம் பாலிசிஸ்டம் கடல்பாசி உரதிரவத்தில் விதைநேர்த்தி மற்றும் இலைவழி நுண்ணூட்டம் கொடுத்த பாத்திகளில் செடியின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும் காரணிகளின் அளவுகள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்புக்கு: சுஜாதா, மதுரை. 94437 90200.-கே.சத்தியபிரபா, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !