சின்ன சின்ன செய்திகள்
த.வே.ப.க. தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)3: இளநீருக்கு ஏற்ற சுவையுடையது. அதிக பொட்டாசியம் சத்து அடங்கிய புதிய தென்னை ரகம். ஈரியோபைட் சிலந்தியைத் தாங்கி வளரும் திறனுடையது. 3 ஆண்டுகளில் பூக்கம். நடவு செய்ய ஆனி - ஆடிப்பட்டம், மார்கழி-தைப் பட்டம் ஏற்ற பருவங்களாகும். சராசரி விளைச்சல். ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 86 காய்கள் காய்க்கும். அதிக அளவு விளைச்சலாக ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 121 காய்கள் காய்க்கும். தமிழகத்தில் பாசன வசதியுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. தொடர்புக்கு: 04253- 288722.த.வே.ப.க. பால்காளான் கோ (டி.ஜி)3: சாதாரண சூழ்நிலையில் 3 நாள் வைத்து பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து5 முதல் 6 நாட்கள் பயன்படுத்தலாம். இக்காளானில் நார்ச்சத்து 20.71 சதம், புரதம் 32.9 சதம், மாவுச்சத்து 11.8 சதம், சாம்பல் சத்து 8.32 சதம் ஆகியவை அடங்கியுள்ளது. வயது 45 முதல் 50 நாட்கள். பருவம்: வருடம் முழுவதும். சராசரி ஒரு கிலோ உலர்ந்த வைக்கோலிலிருந்து 1.60 கிலோ காளான் கிடைக்கும். அதிக அளவு விளைச்சலாக ஒரு கிலோ உலர்ந்த வைக்கோலிலிருந்து 1.76 கிலோ காளான் கிடைக்கும். தமிழகத்தின் சமவெளி பகுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யலாம். தொடர்புக்கு: 0422-661 1240.த.வே.ப.க. கரும்பு சி.8: நடு, பின் பட்டத்திற்கேற்ற சிறந்த ரகமாகும். அதிக சர்க்கரை சத்து 13 சதம். பருமனான நிமிர்ந்த கரும்பு. இக்கரும்பு சுனையற்றது. தோகை மிக எளிதில் உரிக்கலாம். இயந்திரம் மூலம் அறுவடைக்கும் உகந்த ரகமாகும். வறட்சி மற்றும் அதிக நீர்த்தேக்கத்தை தாங்கும் திறனுடையது. செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. களர்நிலத்தில் நன்றாக வளரக்கூடிய ஒரு சிறந்த கரும்பு ரகம். வயது 330 நாட்கள். பருவம் - நடு மற்றும் பின்பட்டம் (பிப்ரவரி முதல் மே வரை). விளைச்சல்-146 டன்கள்/எக்டர். (மறுதாம்பு 135 டன்கள்/எக்டர்). அதிக விளைச்சலாக எக்டருக்கு 187 டன் கரும்பு மகசூல் தரும். உகந்த மாவட்டங்கள் - கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. தொடர்புக்கு: 0431-261 4217.கரும்பு ஆராய்ச்சி நிலையங்கள்: 1. வேலூர் மாவட்டம் குடியாத்தம், 04171-222 0275. 2. கடலூர், 04142-220 630, 3. திருச்சி மாவட்டம், சிறுகமலை, 0431-261 4217.தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்: செம்மண் நிலம், வண்டல், மணல் கலந்த நிலம், மணற்பாங்கான நிலம் ஆகியவற்றில் பலா நன்றாக வளரும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய தென்னந்தோப்புக்களில் பலாவை இணைப்பயிராக சாகுபடி செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அணவயல் போன்ற பல கிராமங்களில் தென்னந்தோப்பில் பலா சிறந்த பணம் கொழிக்கும் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. பலா வெப்பமண்டலப் பயிர் மரமாகும். சதுர முறையில் 25 x 25 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளன. இளம் தென்னந்தோப்பு அல்லது வளர்ந்த தோப்புகளிலும், பலாக்கன்றுகளை இணைபயிராக நடலாம். ஏக்கருக்கு சுமார் 70-80 தென்னை நடப்பட்டுள்ள வயலில் எந்த ஒருநான்கு மரங்களுக்கு நடுவிலும் ஒரு பலாக்கன்று வீதம் ஏக்கரில் சுமார் 50 கன்றுகள் நடவு செய்யலாம். (தகவல்: பி.ஹரிதாஸ், விதைச்சான்று உதவி இயக்குநர், கடலூர்).-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.