உள்ளூர் செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்: சராசரியாக புளியம்பழம் 55 சதவீதம் சதைப்பற்றுள்ள பகுதியையும், 34 சதவீதம் கொட்டையையும், 11 சதவீதம் நாறும், ஓடும் கொண்ட பகுதியாகும். ஒட்டும் பசை, பெக்டின், கால்நடைத்தீவனம், புரதம் ஆகியவை தயாரிக்க புளியங்கொட்டையின் உள் அமைந்த பருப்புப்பொடி ஆதாரமாக அமைகிறது.பெக்டின் - ஜாம், ஜெல்லி தயாரிக்க பயன்படுகிறது. வியாபார ரீதியாக பழங்களிலிருந்தும், பழத்தோலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.ஒட்டும் பசை - புளியங்கொட்டையினுள் உள்ள பருப்புப் பொடியில் இருமடங்கு தண்ணீரைச் சேர்த்து 5 சதவீதம் குளுக்கோஸ், 12 சதவீதம் சோடியம் பைகார்பனேட் சேர்த்து ஒட்டும்பசை தயாரிக்கப்படுகிறது. அறை தடுப்புச் சுவர்கள் அமைக்க பயன்படும். அட்டைகள் தயாரிக்க ஒட்டும் பசை பயன் படுத்தப்படுகிறது.தோல்பதனிடும் நிறமி - தோலில் உள்ள டேனின் என்ற நிறமி தண்ணீரில் கரையக்கூடிய பாபிடீனாரிக் கூட்டுப் பொருளாகும். டேனின் எதிர் ஆக்ஸி காரணியாகப் பயன்படுகிறது. புளியங்கொட்டையில் மேற்புற ஓட்டில் 20-32 சதவீதம் வரை டேனின் உள்ளது. இது தோல் பதனிடு தலில் நிறமியாகப் பயன்படுகிறது.புளியங்கொட்டை எண்ணெய் - புளியங் கொட்டை சுமார் 4 முதல் 6 சதவிகித எண்ணெய் சத்தைக் கொண்டுள்ளது. ஹெக்ஸேன் அல்லது குளோரோபார்ம் மெத்தனால் கலந்த கலவை கொண்டு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இன்றியமையா கொழுப்பு அமிலங் களான பால்சிடிக், ஒலியிக், லின்னோலியிக், ஈகோசனாயிக் அமிலங்கள் புளியங்கொட்டை எண்ணெயினுள் கிடைக்கின்றன. கடலை எண்ணெய்க்கு நிகரான தன்மையும் கொண்டுள்ளது.புரதம் - பஞ்ச காலங்களில் புளியங்கொட்டை உணவாக பயன்படுத்தப்பட்டதற்கான வரலாறுகள் உண்டு. 13 முதல் 20 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. திரியோன்னன், டிரிப்டோபேன் தவிர மற்ற அமினோ அமிலங்கள் புளியங்கொட்டையில் உள்ளன. மெத்தியோனைன் கன்சலைசின் ஆகிய அமிலங்கள் முறையே 113-475 மில்லி கிராம் என்ற அளவில் புளியங்கொட்டையில் அமைந்த ஒரு கிராம் மொத்த நைட்ரஜனில் உள்ளது. எனவே புளியங்கொட்டையினுள் உள்ள பருப்பை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் புரதம் நிறையப்பெற்று புரதக்குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கலாம்.புளியங்கொட்டை கோழித்தீவனம்: புளியங்கொட்டை புரதம், மாவு, எண்ணெய் சத்துக்களைக் கொண்டிருப்பதால் கால்நடை மற்றும் கோழித்தீவனமாகப் பயன்படுத்தலாம்.எரிகட்டிகள் : புளியங்கொட்டையின் மேற்புற ஓடுடேனின் பிரித்தெடுக்கப் பட்ட பின்பு சுமார் 13 முதல் 20 சதவிகிதம் வரை நார்ச்சத்து கொண்டுள்ளது. இதனுடன் பழ மேற்புற ஓடும் ஒட்டும் பசையும் கொண்டு அதிக அழுத்தத்தில் எரிகட்டிகள் தயாரிக்கலாம்.புளியங்கொட்டையிலிருந்து உணவுப்பொருட்களும் பாலிமர் பொருட்களும் தயாரிக்க பலவிதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. (தகவல் : ந.கற்பூர சுந்தரபாண்டியன், முனைவர் பெ.ராஜ்குமார், வேளாண் பதன செய் பொறியியல் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி-620 008. போன்: 0431 - 290 6100)விலை முன் அறிவிப்பு : ஆடிப்பட்டத்தில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம் நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு வரும். கடந்த 20 ஆண்டுகளில் உடுமலை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட விலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.1400க்கு விற்பனையாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் சோளம் ரூ.19 / கிலோ, எள் ரூ.8700 / கிலோ, நிலக்கடலை கிலோ ரூ.4300க்கும், இப்பட்டத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காயம் அறுவடைக்கு வரும். அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஒரு கிலோ 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் வெளியிட்டுள்ளது.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !