உள்ளூர் செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

தோட்டக்கலைப் பயிர்களைப் பாதிக்கும் நத்தைகள்: பாக்கு, ஏலம், மிளகு, வாழை, பப்பாளி, லெட்டூஸ், முட்டைக்கோஸ், கொய்மலர்கள், அழகு தாவரங்கள், கடலை, சோயாபீன்ஸ், மக்காச்சோளம் ஆகியன நத்தைகளுக்கு மிகவும் விருப்பமான பயிர்வகைகளாகும்.இலைகளின் அடிப்பகுதியில் இருந்துகொண்டு இலைகளைத் தின்று 50 சதவீத சேதத்தை விளைவிக்கின்றன. இறுகிய மண் கண்டங்கள், இடுக்குகள், புதர்கள், குப்பை குவியல்கள் ஆகிய பகுதிகளில் மறைந்துகொண்டு இரவு நேரத்தில் பயிர்களைத் தாக்கும்.பாதுகாப்பு வழிகள்: உழவியல் முறை: நத்தைகளின் தாக்குதலுக்கு எளிதில் உட்படும் தாவரங்களை 3 முதல் 5 மீட்டர் இடைவெளி விட்டு தள்ளி பயிர்செய்வதன் மூலம் நத்தைகளின் இடப்பெயர்ச்சியை தவிர்க்கலாம்.அழிக்கும் முறை: கைகளால் பொறுக்கி அழித்தல் வேண்டும். பயிர் செய்யா காலங்களில் நத்தைகளின் மறைவுப்பகுதிகளைத் தேடி கண்டுபிடித்து களையலாம். மழைக்காலங்களில் ஈரமான சாக்குகளையோ (அ) இலைகளையோ குவித்து நத்தைகளை ஈர்த்து அங்கு வரச்செய்து பின்னர் கைகளால் பொறுக்கி அழிக்கலாம்.உயிரியல் முறை: இயற்கையிலேயே நத்தைகளின் நடமாட்டத்தைப் பொறுத்து, இவற்றை உண்ணும் நத்தை வகை யூக்லாண்டினா, கோனாக்சிஸ் வகைகளும், நண்டு வகைகள் மற்றும் பூரான் வகைகள் காணப்படுகின்றன. ஆனால் செயற்கை முறையில் இதனைக் கட்டுப்படுத்த பயன்படுத்துவது சாத்தியமற்றது.வேதியல் முறைகள்: சேதம் அதிகமுள்ள நிலப்பரப்பைச் சுற்றி 5 சதம் மேட்டால்டிஹைடு துகள்களைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இலை நத்தைகளிலுள்ள திரவப் பொருட்களை அதிகம் சுரக்கச்செய்து செயலிழக்கச் செய்கின்றன. பொதுவாக நத்தைகளுக்கு உப்பு என்றால் ஒவ்வாமை. பயிர் வளர்க்கப்படும் இடத்தைச் சுற்றிலும் உப்பு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ இடுவதன் மூலம் இதன் செயல்பாட்டைக் குறைக்கலாம். தகவல்: முனைவர் டி.திலகம், முனைவர் ரா.அருள்மொழியாள், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு.காய்கறி நாற்றங்கால் உற்பத்திக்கான குழித்தட்டில் விதையிடும் தானியங்கிக்கருவி: இக்கருவி கொண்டு ஒரு நாளைக்கு 600 தட்டுகள் விதை போட ஆகும் செலவு ரூ.350/- இதனால் பண சேமிப்பு 117 சதவீதம். ஆள் சேமிப்பு 60 சதவீதம். இதன் விலை ரூ.30,000.சிறப்பியல்புகள்: நகரும் கச்சைமேல் வைக்கப்பட்ட குழித்தட்டில் முனைப்புக் கலவையை தானாகவே சரியான அளவில் நிரப்பி, விதைகளும் இடப்பட்டு கலவையினால் மூடப்படும் தன்மை; விதை முளைப்புக் கலவையை தேவையான அளவில் மெத்துதல்; ஊசி அமைப்பிலான விதையைப் பொறுக்கும் கருவி, விதையினை தட்டில் சீராக இடுதல்; விதைத்தட்டு கீழே இருப்பதை அறிந்து சரியான முறையில் விதைகளை இடுவதற்கான சிறப்புத்திறன். மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், பண்ணைக்கருவித்துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம், கோயம்புத்தூர் -641 003. போன்: 0422-661 1257.அடுக்குப்பயிர் சாகுபடி: தென்னையில் ஊடுபயிராக வாழை, பாக்கு, கோகோ என ஆரம்பித்து ஒன்றரை ஏக்கரில் 50 தென்னை, 25 பெருநெல்லி, 460 கோகோ, 30 பாக்கு, 2 மா, 4 கொய்யா, 9 சீத்தா, 4 ராம்சீத்தா, 10 பலா, 3 சாத்துக்குடி, 2 ஆரஞ்சு, 3 பப்ளிமாஸ், 3 நாரத்தை, 3 சிறுநெல்லி, 15 தேக்கு, 15 குமிழ், 20 மகோகனி, 4 அத்தி, 3 எலுமிச்சை, 10 செண்பகம் உட்பட 740 மரங்களை வைத்திருக்கும் விவசாயி விழுப்புரம் மாவட்டம் குமாரம் கிராமத்தைச் சேர்ந்த சோமு. தோட்டத்தைச் சுற்றி உயிர்வேலி போட்டு அதில் வெற்றிலைக்கொடியை ஏற்றிவிட்டிருக்கிறார். வரப்புகளில் வெட்டிவேர் நடவு செய்திருக்கிறார். ஒன்றரை ஏக்கரில் வேலையாட்கள் கூலி ரூ.1,20,000 போக நிகர லாபமாக ரூ.2,69,000 பார்க்கிறார். தொடர்புக்கு: சோமு, மொபைல்: 94420 86431.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !