உள்ளூர் செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

நெற்பயிரில் உற்பத்திச் சங்கிலி மேலாண்மை: விதை, உரம், இதர இடுபொருட்கள் வாங்குதல், விதை விதைத்தல், உரமிடுதல், களை எடுத்தல், பயிரைக் காப்பு செய்தல், அறுவடை செய்தல் ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் சேர்த்து விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் வரையிலான உற்பத்திச் சங்கிலியில் ஒவ்வொரு நிலையிலும் செலவினைக் குறைத்து மதிப்பினைக் கூட்டி, இந்தச் சங்கிலியை முன்னும் பின்னுமாக இணைத்தல் 'உற்பத்திச் சங்கிலி மேலாண்மை' எனப்படும். நெல் சார்ந்த உழவர் குழுக்கள் அமைப்பது உற்பத்திச் சங்கிலி மேலாண்மைக்கு மிகவும் அவசியம். அவ்வாறு அமைவதால் ஒவ்வொரு நிலையிலும் உற்பத்திச்செலவு குறைந்து மதிப்பு கூட்டப்படும்.முதல் நிலை - இடுபொருட்கள் வாங்க திட்டமிடல்; இரண்டாம் நிலை - உற்பத்தி செய்தல்; மூன்றாம் நிலை - சந்தைப்படுத்துதல்.உற்பத்தி செய்தல்: நெற்பயிரில் முக்கியமான செயல்பாடு நாற்றங்கால் நடவு, நெல்நடவு இயந்திரம் ஆகியவற்றால் குறையை தீர்ப்பதோடு சரியான நேரத்தில் நடவு செய்ய மிகவும் உதவுகிறது. தற்போது பெரிய உழவரோ, தனியார் நிறுவனமோ, நெல் நடவு இயந்திரத்தை ஓட்டுனருடன் வாடகைக்கு வாங்கி நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு 'நெல் உழவர் குழு' இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒன்று அவர்கள் குழுவாக முறையிட்டு வாடகையை வெகுவாக குறைக்கலாம். இரண்டாவது அரசு சார்ந்த நிறுவனங்கள், வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மைப் பொறியியல் துறையைக் குழுவாக அணுகினால் மிகக் குறைந்த வாடகைக்கு நடவு இயந்திரத்தைப் பெறலாம். மூன்றாவதாக, குழு செம்மையாக இருப்பின் அவர்களே நடவு இயந்திரம் வாங்கி நடவு செய்துகொள்ளலாம். இதைப்போல் களை எடுக்கும் கருவி, நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றை ஒரு குழுவாக இருப்பின் குறைந்த வாடகைக்குப் பெறலாம்.குழு வேளாண்மை வலுவான மேலாண்மை. அதுவே எதிர்கால விவசாயம். (தகவல்: முனைவர் மு.ராமசுப்பிரமணியன், முனைவர் தி.செங்குட்டுவன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம். 94867 34404)தமிழ்நாடு வன விரிவாக்கத்துறை வழங்கும் தனியார் தரிசு நில மேம்பாட்டு மானியங்கள்: தனியார் தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்து நிலங்களை மேம்படுத்துவதற்கான மரக்கன்றுகளும் மரம் நடுவதற்கான செலவு தொகை மற்றும் பராமரிப்புத் தொகையும் மானியங்களாக தமிழ்நாடு அரசின் வன விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை பெறுவதற்கு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள வன விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மையங்களிலேயே சவுக்கு, குமிழ், வேங்கை, மகோகனி, தேக்கு, ஈட்டி, வேம்பு, செம்மரம் போன்ற மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விபரங்களைப்பெற அந்தந்த மாவட்டங்களில் உள்ள வன விரிவாக்க மையங்களை தொடர்புகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.சில மாவட்டங்களில் உள்ள மையங்களின் முகவரிகள்:* வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், பசுமலை, மதுரை.* வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், கலோனல் நர்சரி வளாகம், வைகை அணை, ஆண்டிபட்டி வழி, தேனி. போன்: 04546-291 578. * வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர். போன்: 04362-292 989.* வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், பட்டத்து அரசி அம்மன் கோயில் எதிரில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர். * வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், சாத்தான்குளம், தூத்துக்குடி.* வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், மண்டபம் ரோடு, சுங்க இலாகா அலுவலகம் எதிரில், ராமநாதபுரம்-623 503.* வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல். 0451-246 1924. * வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க மையம், சித்தர்கோவில், சேலம்.* வன விரிவாக்க அலுவலர், வன விரிவாக்க கோட்டம், பி.கே.அகரம் போஸ்ட், பாடலூர் வழி, திருச்சி.* வன விரிவாக்க அலுவலர், 8, ஆர்.எஸ்.லாட்ஜ், பவர் ஹவுஸ் எதிரில், வடகோவை, கோயம்புத்தூர். 0422-201 0374.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !