மிளகாய் சாகுபடியில் சில ரகங்கள்
ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ரகம் நவம்பர் மாதத்தில் சாகுபடியைத் துவங்கி ஏப்ரல் மாதம் வரை சாகுபடி செய்யலாம். இந்த ரகத்தின் செடி 75-80 செ.மீ. வரை உயரமாக வளரக்கூடியது. இதன் காய்கள் 15செ.மீ. - 16செ.மீ. நீளமும் 3 செ.மீ. கனமும் உடையது. காய்கள் மெழுகால் செய்தது போல் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். காய்களின் காரம் குறைவாக இருக்கும்.ஸ்வீட் பனானா என்று அழைக்கப்படும் இந்த ரகமும் பாப்ரிக்கா இனத்தைச் சேர்ந்தது. செடிகளின் உயரம் 75-80 செ.மீ. இருக்கும். காய்கள் நீளமாகவும் சாதாரண ரகங்களைப் போல் நுனி பாகம் பூமியை நோக்கி இருக்கும்படி காய்க்கும். இந்த ரகங்களின் தோல் மெல்லியதாகவும், காரம் குறைந்ததாகவும் இருக்கும். ஒவ்வொரு ரகங்களையும் 10 சென்ட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நன்கு கவனித்து ரசாயன உரம், மக்கிய உரம் இவைகள் தாராளமாக இடப்பட்டன. செடிகள் பூச்சி வியாதியால் பாதிக்கப்படவில்லை. ஹங்கேரியன் செடிகளில் காய்ப்பு சரியில்லை. ஸ்வீட் பனானா நன்கு காய்த்தது. வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள். சாகுபடி குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.சாகுபடி குறிப்புகள் - ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ், ஸ்வீட் பனானா10 சென்ட் பரப்பு: விதை அளவு-10 கிராம்; நாற்றங்கால்-நீளம் 2 அடி, அகலம் 1 அடி, உயரம் 10 செ.மீ.,; நாற்றின் வயது -45 நாட்கள்; தொழு உரம்-600 கிலோ; அடி உரம் - காம்ப்ளக்ஸ் - 25 கிலோ. மேலுரம் - முதல் அறுவடைக்குப் பின் யூரியா 10 கிலோ போதுமான அளவு பாசனம் தர வேண்டும். அறுவடை நட்ட 75-80 நாட்களில் முதல் அறுவடை 10 சென்ட் சாகுபடி செலவு - ரூ.2,425.00.ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ்: 10 சென்ட்டில் கிடைத்த 450 கிலோவின் மதிப்பு ரூ.3,150.00; நிகர லாபம் - ரூ.725.00.ஸ்வீட் பனானா: 10 சென்ட்டில் கிடைத்தது 700 கிலோவின் மதிப்பு ரூ.4,900.00, நிகர லாபம் - ரூ.2,475.00மேலே கொடுக்கப்பட்டுள்ள 10 சென்ட்டில் கிடைத்த அனுபவம் உற்சாகம் அளிக்கின்றது. இந்த விவரம் உற்சாகம் தருவதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்து லாபம் எடுக்கலாம்.இந்த ரகங்களுக்கு அதிக அளவில் கிராக்கி இருப்பதால் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இந்த மிளகாய் ரகங்களை விரும்பி வாங்குகிறார்கள். ஓசூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காய்கறி சாகுபடி திறமையாக செய்யப்படுகின்றது. விவசாயிகள் காய்கறிகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு தங்கள் சாகுபடியில் தயாரித்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். கட்டுரையைப் படிக்கும் விவசாயிகள் மேலே கூறப்பட்டுள்ள ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ் மற்றும் ஸ்வீட் பனானா மிளகாய் ரகங்களை சாகுபடி செய்து நல்ல பலன் அடையலாம்.-எஸ்.எஸ்.நாகராஜன்.