கணிசமான வருவாய்க்கு ஸ்ட்ராபெர்ரி கொய்யா
மஞ்சள் நிற ஸ்ட்ரா பெர்ரி ரக கொய்யா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை, நம்மூரில் சாகுபடி செய்யலாம். இதில், ஸ்ட்ரா பெர்ரி ரக கொய்யா ஒன்றாகும். இது, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும், ஸ்ட்ரா பெர்ரி கொய்யா சாகுபடி செய்யலாம். இதன் வாயிலாக வீட்டு தேவைக்கு போக, கணிசமான வருவாய் ஈட்டலாம். குறிப்பாக, ஸ்ட்ரா பெர்ரி ரக கொய்யா, பிற ரக கொய்யா பழங்களை போல பெரிதாக இல்லாமல், நெல்லிக்காய் அளவிற்கு சிறிதாக இருக்கும். கொத்துக்கொத்தாக காய்க்கும் தன்மை உடையது. இந்த கொய்யாப்பழம் சிறிதாக இருந்தாலும், அவ்வளவும் மருத்துவ குணம் நிறைந்த பழமாக இருக்கும்.அதிக சுவையுடைய ஸ்ட்ராபெர்ரி ரக கொய்யாவை, நம்மூரில் சாகுபடி செய்தால், கூடுதல் பணம் கொடுத்து வாங்கவும் பொதுமக்கள் தயக்கம் காட்டமாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.