சுரக்கும் வருவாய்க்கு சுகந்தி கீரை
சுகந்தி கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:பாரம்பரிய ரக காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக்கொண்டு, மீதம் கீரை, காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.அந்த வரிசையில், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், சுகந்தி கீரை சாகுபடி செய்துள்ளேன். இது, 60 நாட்களில் அறுவடை செய்யலாம். இந்த ரகத்தில், நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை.நீர் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிர்வாகத்தை முறையாக கையாண்டால், கிளைப்பு திறன் அதிகமாக இருக்கும். குறிப்பாக, 10 சென்ட் நிலத்தில், 10,000 ரூபாய் வரையில் வருவாய் ஈட்டலாம். ஏக்கருக்கு, 1 லட்சம் ரூபாய் வரையில், 60 நாட்களில் வருவாய் கிடைக்கும். இது, நெல் மற்றும் காய்கறிகளை காட்டிலும், கூடுதல் வருவாய்தான்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. குகன்,94444 74428.