உள்ளூர் செய்திகள்

வனிலா

வனிலா என்பது இயற்கையான நறுமணப் பண்டங்களுள் ஒன்றாகும். இதன் விவசாயம் மிகவும் பலன் தரத்தக்கது. முன்னவே நடவு செய்த தாங்கு மரங்களின் அருகிலேயே வனிலாத் தண்டுகளை நடவு செய்வதே அதற்குரிய முறையாகும். ஆதலால் இதன் கொடிகளைத் தாங்கு மரங்களின்மீது கட்டி ஏற்றிவிட வேண்டும். இதனுடைய தூர்ப் பாகங்களில் போதுமான அளவுகளில் மூடாக்குகள் இட்டால் வேர்கள் நன்றாக நிலத்தில் பரவும். இளம் கொடிகளைச் சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இதன் வளர்ச்சியைப் பராமரிக்க வேண்டும். வளர்ந்துவரும் தண்டுகளின் நுனிகளிலிருந்து 10-15 செ.மீ. நீளம் வரை முறித்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பூக்கள் உண்டாவதற்கு ஏதுவாக இருக்கும்.பாக்கு தோப்புகளிலும் தென்னந் தோட்டங்களிலும் ஊடுபயிராக வனிலா விவசாயம் செய்யப் படுகிறது. கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய், மிளகு, பட்டை போன்ற பல்வேறு ஸ்பைசஸ் பயிர்களின் ஊடாகவும் பயிரிடலாம். அவ்வாறு ஊடுபயிராக இது அமையும்போது இதன் விவசாயத்திற்கு என்று பிரத்யேகமாக எந்தச் செலவும் தேவைப்படுவதில்லை. சொற்பமான ஆட்களைக்கொண்டு மகரந்தச் சேர்க்கை செய்தாலே போதும்.தென்னிந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் வனிலாவின் விவசாயம் சிறப்பாக இயங்கிவருகிறது. கர்நாடகாவில் சாகரா வட்டத்தில் உள்ள விவசாயிகள் 'மலநாடு வனிலா விவசாயிகளின் சங்கம்' என்ற ஸ்தாபனத்தின் மூலம் தங்களைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். கேரளாவில் சில பாகங்களிலும் வனிலா விவசாயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மலைப்பாங்கான பிரதேசங்களில் இதனை விவசாயம் செய்வதற்கும் அதன்மூலம் பெரும் பணம் ஈட்டவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.அன்னிய நாடுகளைப் பொறுத்தமட்டில் மெக்சிகோ, மடகாஸ்கர், இந்தோனேஷியா, ரீயூனியன் தீவுகள் ஆகியவற்றில் இதன் விவசாயம் சில நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு இதனை ஏற்றுமதிசெய்து அன்னியச் செலாவணியை பெருமளவில் ஈட்டுகின்றன.வனிலா சேர்க்கப்பட்ட கேக் வனிலா என்ற பெயரில் பேக்கரிகளில் கிடைக்கின்றது. இந்த கேக் மிக மென்மையாகவும் இனிய சுவையுடனும் உள்ளது. சிறுவர் சிறுமிகளின் இஷ்டபூர்வமான ஒரு திண்பண்டமாக இது விளங்குகிறது.காசர்கோடு சார்ந்த வணிகர்கள் தொழில்முறையில் வனிலாவை மூலப்பொருளாகக் கொண்டு 'வனிலா சுகர்' என்ற புதிய படைப்பை உண்டாக்கியுள்ளனர். இதன் தொடர்பில் ஐஸ்கிரீம், பாதாம்பால் முதலான சுவையான வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.எஸ்.நாகரத்தினம், 56, லட்சுமிகாலனி, கச்சேரி ரோடு, விருதுநகர்ண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !