உள்ளூர் செய்திகள்

இழப்பீடு இன்றி மகசூல் ஈட்டும் வழிமுறைகள்

மழைக்கு பின் செடிகளை பராமரிப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழைக்கு, மாடித்தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி, காய்கறி, பழச்செடிகள் சேதம் ஏற்பட்டிருக்கும்.மழைக்காலத்திற்கு பின், காய்கறி, பழச்செடிகளுக்கு ஏற்ப, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக, மாடி தோட்டம் மற்றும் தரைப்பகுதிகளில் நடப்பட்டு இருக்கும் பழம், காய்கறி தலா ஒரு செடிக்கு, 100 கிராம் மண்புழு உரம், 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கலந்து, செடிகளுக்கு உரமாக போடலாம்.இதுதவிர, பூஞ்சாணங்களை கட்டுப்படுத்துவதற்கு, டிரைக்கோடர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களை, 2 லிட்டர் தண்ணீரில், 1 கிராம் கலந்து தெளிக்கலாம்.இதுபோல செய்யும் போது, பழம் மற்றும் காய்கறி செடிகள் பருவ கால மழைக்கு பின் இழப்பீடு இன்றி மகசூல் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்98419 86400


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !