அதிக விளைச்சலுக்கு வெள்ளேரி மாங்காய் சாகுபடி
வெள்ளேரி மாங்காய் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் களிமண், செம்மண்ணில் அனைத்து விதமான பழங்களையும் சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், அனைத்து விதமான பழங்களையும் சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், வெள்ளேரி மாங்காய், விவசாயிகள் விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில் சாகுபடி செய்யலாம். இந்த மாங்காய்கள் சாப்பிடுவதற்கு, வெள்ளேரிக்காய் போல இனிப்புடன், அதிக சுவையுடன் இருக்கும். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என, ஆண்டிற்கு இரு முறை அறுவடை செய்யலாம். கொத்து கொத்தாக காய்கள் காய்ப்பதால், கூடுதல் எடை கிடைக்கும். அதிக வருவாய் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற ரகம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே. சசிகலா, 94455 31372.