உள்ளூர் செய்திகள்

மலை மண்ணில் சாகுபடியாகும் வேர்க்கடலை வெண்ணெய் பழம்

மலை மண்ணிலும் வேர்க்கடலை வெண்ணெய் பழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், வேர்க்கடலை வெண்ணெய் பழத்தை ஊடு பயிராக சாகுபடி செய்துள்ளேன்.இது, களர் உவர் நிலங்களை தவிர, பிற அனைத்து விதமான நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில் சாகுபடி செய்யலாம். செடிகளை நட்டு, இரு ஆண்டுகளில் மகசூல் கொடுக்க துவங்கும்.இந்த வேர்க்கடலை வெண்ணெய் பழங்கள், காய்கள் பச்சை நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்தில் பழங்களையும் காண முடியும்.இது, இந்தோனேஷியா பகுதியில் விளையும் அரிய வகை பழங்கள் என்பதால், சந்தையில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.குறிப்பாக, வேர்க்கடலையில் புரத சத்துடன், எண்ணெய் சத்து சேர்ந்தே இருக்கும். இந்த வேர்க்கடலை வெண்ணெய் பழத்தில், அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது.எண்ணெய் சத்து அறவே கிடையாது. பொதுவாக, வேர்க்கடலை குறிப்பிட்ட சீசனுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த வேர்க்கடலை வெண்ணெய் பழம், அனைத்து சீசன்களில் விரும்பி சாப்பிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.வெங்கடபதி, 93829 61000.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !