உள்ளூர் செய்திகள்

கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கும் மா பராமரிப்பு

மா மரக்கிளை வெட்டி அகற்றிய பின், பராமரிப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த, புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாய பண்ணை நிர்வாகி ப.அவினாஷ் கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், பங்கனபள்ளி, அல்போன்சா, பெங்களூரா உள்ளிட்ட பலவகை மா ரகங்களை சாகுபடிசெய்துள்ளேன்.எவ்வித ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வரப்படுகிறது. மகசூல் எடுப்பதற்கு முன், செடிகளின் கிளைகள் அகற்றம், உயிர் உரம் தெளித்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.பொதுவாக, மா அறுவடை முடிந்த பின், பக்கவாட்டு கிளைகளை வெட்டி எடுக்க வேண்டும். வெட்டிய இடங்களில், புளு காப்பரை தடவ வேண்டும். அப்போது தான், பூஞ்சை தொற்றுகளை தடுக்க முடியும்.மழைக்காலத்திற்கு பின், வாரத்திற்கு ஒரு முறை ஜீவாமிர்த கரைசலை, தண்ணீருடன் கலந்து பாய்ச்சும் போது, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: ப.அவினாஷ்,93443 45382.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !