நோய் எதிர்ப்பு தன்மைக்கு சண்டிகார் ரக நெல்
சண்டிகார் ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், சண்டிகார் ரக நெல் தனியாகும். இது, 150 நாட்களில் விளைச்சல் தரக்கூடியது. சம்பா, நவரை ஆகிய பருவ காலங்களிலும், வளரும் தன்மை உடையது.இந்த, ரக நெல், காபிக்கொட்டை நிறத்திலும், அரிசி இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லில், இயற்கையாவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இருக்காது. சண்டிகார் ரக அரிசியில், அனைத்து வித மருத்துவ குணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, நரம்பு மண்டலம் சீராக வைக்கவும், நரம்பு தளர்ச்சி போக்குவதற்கு சிறந்த உணவாகவும் இருக்கும்.ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: என். மகாலட்சுமி, 98414 42193.