உள்ளூர் செய்திகள்

கூடுதல் மகசூலுக்கு வழிவகுக்கும் மேம்படுத்தப்பட்ட உரம்

மேம்படுத்தப்பட்ட தொழு உரம் தயாரிப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம் அடுத்த, நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல், பயறு வகை பயிர்கள், காய்கறி ஆகியவை இயற்கை முறையில் விளைவித்துக்கொண்டிருக்கிறேன்.பஞ்சகாவ்யா, ஜீவாமிர்த கரைசல் ஆகிய கரைசலை பூச்சி விரட்டியாவும், மேம்படுத்தப்பட்ட தொழு உரம் வயலுக்கு அடியுரமாகவும் போட்டு மகசூல் ஈட்டி வருகிறேன். இதன் மூலமாக இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் பெற முடிகிறது. குறிப்பாக, 1,000 கிலோ சாண உரத்திற்கு, 200 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், 2 கிலோ வெல்லம், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், டிரைக்கோடர்மா-விரிடி, பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை தலா ஒரு லிட்டர் எடுத்து, பேரலில் ஊற்றி கலந்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு, 1,000 கிலோ சாண உரத்தில், கொட்டி கலக்க வேண்டும். அதை நிழலில் குவித்துவைத்து, ஒரு வாரம் கழிந்த பின், நெல், காய்கறி உள்ளிட்ட பல வித பயிர்களுக்கு உரமாக போடலாம்.இதுபோல, செய்யும் போது பயிர்கள் நன்றாக வளர்ச்சி பெற்று, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:நீலபூ.கங்காதரன், 96551 56968


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !