உள்ளூர் செய்திகள்

மர இடைவெளியில் ஊதா நிற பேஷன் புரூட் 

ஊதா நிற பேஷன் புரூட் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.இந்த மரங்களின் இடைவெளியில், ஊதா நிற பேஷன் புரூட் சாகுபடி செய்துள்ளேன். இது, கொடி வகை பயிர் என்பதால், ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இருக்கும் இடைவெளியில், பந்தல் அமைத்து பழத்தின் கொடியை ஏற்றி விட்டுள்ளேன்.இது, பூ எடுக்கும் போது ஊதா நிறத்திலும், காய்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், பழங்களாக மாறும் போது ஊதா நிறத்தில் மாறும்.இந்த பழங்கள் ஜூஸ்சுக்கு மட்டும் பயன்படுவதால், குளிர்பானங்களின் கடைகளில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,89402 22567.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !