உள்ளூர் செய்திகள்

செம்மண் நிலத்திலும் பாகுவா ரக மாதுளை

பாகுவா ரக மாதுளை பழ சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் செம்மண் மற்றும் களிமண்ணுக்கு அனைத்து விதமான பழ மரங்களை சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், புதுமையான பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், நம்மூர் செம்மண் நிலத்தில், வட இந்தியா, ஆப்கானிஸ்தானில் வளரும் பாகுவா ரக மாதுளை சாகுபடி செய்துள்ளேன். செடி நன்றாக வளர்க்கிறது.குறிப்பாக, எந்த ஒரு பழ மரம் சாகுபடி செய்தாலும், பழக்கன்றுகளின் சுற்றிலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு, வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும்.பிற நாடுகளின் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்யும் போது, உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை முறையாக கையாண்டால் போதும். பிற நாடுகளை கிடைக்கும் மகசூலை போல, நம்மூரில் சாகுபடி செய்யும் போதும் கிடைக்கும்.இந்த பாகுவா ரக மாதுளை பழத்தில், அதிக சுவையுடன் கூடிய ஜூஸ் கிடைக்கிறது. மேலும், கொத்து கொத்தாக மகசூல் கிடைப்பதால், வருவாய்க்கு உகந்தது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா 94455 31372.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !