உள்ளூர் செய்திகள்

மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த எளிய வழி

பச்சைப்பயறில், மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:நெல் அறுவடைக்கு பின் தரிசு நிலத்தில், பச்சைப்பயறு சாகுபடி செய்தால், மண் வளம் மேம்படும். வெள்ளை ஈக்களால், மஞ்சள் தேமல் நோய் தாக்கம் ஏற்படும்.தேமல் நோய் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில், மஞ்சள் நிற புள்ளிகள் லேசாக தோன்றும். நோய் தீவரம் அடைந்த பின், இலை முழுதும் மஞ்சள் நிறத்தில் மாறி விடும். ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு பூ எடுக்கும் தருவாயில் இழப்பு ஏற்படுத்தும்.இதை எளிய முறையில் தடுக்க, வரப்பு ஓரமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். போராக்ஸ், 2 கிராம், 10 சதவீதம் நெச்சி இலை சாரு, இமிடாகுளோபிரிட் ஆகியவை கலந்து, விதை நேர்த்தி செய்து, பச்சை பயறு விதைக்கலாம்.பேசில்லஸ்சப்டிலிஸ் என்ற பாக்டீரியா உயிர்க்கொல்லியை ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம், 100 கிலோ தொழு உரத்துடன் சேர்த்து மண்ணில் தெளிக்கவும்.ஒரு ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் ஒட்டுண்ணி அட்டை அமைக்கலாம். தேவைப்படும்போது, இமிடாகுளோபிரிட் மருந்தை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 15 மில்லி கலந்து வயலில் தெளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- -முனைவர் செ.சுதாஷா,தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர்,திரூர் நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளூர். 97910 15355.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !