ஆண்டு முழுதும் மகசூலுக்கு காஞ்சி பருல் ரக கத்திரிக்காய்
காஞ்சி பருல் ரக கத்திரி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், காஞ்சி பருல் ரக வெள்றை நிற கத்திரிக்காய் உற்பத்தி செய்து வருகிறேன்.குறிப்பாக, இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்யும் போது, நீண்ட நாட்களுக்கு மகசூல் கொடுக்கும். இந்த காஞ்சி பருல் ரக வெள்ளை நிற கத்திரிக்காயும் அப்படி தான். இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தால், ஆண்டு முழுதும் மகசூல் எடுக்கலாம். பிற ரக கத்திரிக்காய் காட்டிலும், காஞ்சி பருல் ரகம் கூடுதல் மகசூல் மற்றும் வருவாய் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.மாதவி, 97910 82317.