ஒரே நேரத்தில் களையெடுத்து உரமிடும் கருவி வேளாண் பல்கலை பண்ணை இயந்திரத்திற்கு காப்புரிமை
கோவை வேளாண் பல்கலையால் உருவாக்கப்பட்ட நெல் வயலில் உரமிடும், களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியது.உரமிடுதலையும் களை எடுப்பதையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உரம் வைப்பதற்கான கொள்கலன் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் உரமிடும் வகையில் உள்ளது. இரண்டு பற்சக்கரங்களில் ஒன்றின் மூலம் வயலில் களையெடுக்கப்பட்டு அந்த பற்சக்கரம் மூலம் உரமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் நெல் வயலில் களையெடுத்து உரமிட முடியும் என்பதால் சிறிய பண்ணைகளுக்கு இந்த கருவி பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் ஆட்கள்கூலி, நேரத்தை மிச்சப்படுத்தலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த கருவி வரப்பிரசாதமாக அமையும்.